Skip to main content

தமிழகம், கேரளா மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அமித்ஷா!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

மாநில பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே பேசினார். அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில்பாஜக 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இருந்தாலும், பாஜக தனது வெற்றியின் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கட்சியின் நிர்வாகிகள் கட்சி பணியை மற்றும் ஆற்றாமல், மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாஜக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை அமித்ஷா தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அமைப்பாளராக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை நியமித்தார்.

 

 

UNION HOME MINISTER AMIT SHAH

 

 

அந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவராக யார் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்தனர். கூட்டத்தின் முடிவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் டிசம்பர் மாதம் வரை பாஜக கட்சியின் தலைவராக அமித்ஷா நீடிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்திற்கு  பின்  பாஜக பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.  பிரதமர் மோடியின் தலைமைக்காகவும், மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டுக்காகவும், கட்சி ஊழியர்களின் கடும் உழைப்புக்காகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.16 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை பா.ஜனதா பெற்றுள்ளது. 200 தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி வித்தியாசம் அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் சாதியமும், குடும்ப அரசியலும் வீழ்த்தப்பட்டுள்ளது.

 

 

UNION HOME MINISTER AMIT SHAH

 

 

கடந்த 2014- ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகும்,பாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறினார். இப்போதும் அதையே கூறியுள்ளார். கடந்த 2014- ஆம் ஆண்டுக்கு பிறகு [பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்தது. இப்போது புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அதே போல் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாஜக நிர்வாகிகள் அனைவரும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதாகவும், பாஜக அதற்காக புது வியூகத்தை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்