பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷியா ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பீகாரில் உள்ள ஒரு தலித் வீட்டின் அருகில் தெருக்குழாயில் குளித்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பீகாரில் மாட்டு தீவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர் முன்னாள் பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் . இப்படி குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டும் உடல்நலம் குறைவால் அவதிப்பட்டு வரும் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அவரின் குடும்ப சூழல் காரணமாக அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் அவர் பீகார் வைசாலி மாவட்டத்திலுள்ள மஹுவா எனும் இடத்தி ல் கர்ஹாத்தியா எனும் கிராமத்திலுள்ள ஒரு தலித் வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் நீர் இறைத்து குளிப்பதை புகைப்படம் எடுத்து ''தனது மகிழ்ச்சியான அனுபவம்'' என்ற தலைப்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை அவரது சகோதரனும் பீகாரின் முன்னாள் துணை முதல்வரான தேஜாஷ்வி யாதவ் ரீ ட்விட் செய்துள்ளார்.