Published on 13/07/2018 | Edited on 13/07/2018

ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ''ஜெய் சமயக் ஆந்திரா'' கட்சியின் தலைவருமான கிரண்குமார் ரெட்டி இன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து திரும்பவும் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
ஏற்கனவே கடந்த வருடமே மீண்டும் தாய் கழகமான காங்கிரஸில் சேருவதாக இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியுடன் கிரண்குமார் ரெட்டி பேசிவந்த நிலையில் தற்போது தற்போதைய ஆந்திர காங்கிரஸ் தலைவர் தேவேந்திரகுல ரெட்டி மற்றும் முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார்.