Skip to main content

ஓணம் கொண்டாட்டம் ரத்து: கேரள அரசு முடிவு

Published on 14/08/2018 | Edited on 27/08/2018

 

onam


கேரளாவில் தென்மேற்கு பருவமழை புரட்டி போட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் அரசு நிகழ்ச்சியை ரத்து செய்து இருப்பதாக முதல்வர் பிணராய் விஜயன் அறிவித்திருக்கிறார்.

தென்மேற்கு பருவமழையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று கேரளா அமைச்சரவை கூட்டம் பிணராய் விஜயன் தலைமையில் நடந்தது. அப்போது தென்மேற்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கபடும் நிவாரணத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வந்து சேருகின்ற நிவாரண நிதிகள் குறித்தும் அதேபோல் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிவாரண நிதி குறித்தும் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர நிவாரணம் மற்றும் குடியிருப்புகளை ஏற்படுத்துவது குறித்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கேரளாவில் பெய்த பருவ மழையால் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். எங்கும் செல்லமுடியாத அளவுக்கு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் கிராம தொழில்களும் முழுமையாக அழிந்து கிடக்கிறது.

இந்தநிலையில் அரசு ஒணம் பண்டிகை கொண்டாடுவது நல்லதாக இருக்காது என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதையடுத்து ஒணம் பண்டிகையை ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து கேரளாவில் அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை நடத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளின் ஓணம் நிகழ்ச்சிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தனியார் நிறுவனங்களும் ஒணம் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக உடனே அறிவித்துள்ளன.

நாளையில் இருந்து (அத்தம்) தொடங்கும் ஓணம் நிகழ்ச்சி 25-ம் தேதி திருவோணமாக கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு ஒணம் பண்டிகை கேரளாவில் பருவமழை பாதிக்காத மாவட்டங்களில் உள்ள வீடுகளில் மட்டும் எளிமையாக கொண்டாடப்படும் என்கின்றனர் மலையாளிகள்.

சார்ந்த செய்திகள்