incident that happened to a young woman who went to a friend house

குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இளம்பெண்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ரா மாநிலம் மும்பையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் இளைஞர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி தொலைபேசி எண்களை பரிமாறிகொண்டு பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதனையேற்று அந்த இளம்பெண் இளைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணிற்கு இளைஞர் மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதனை குடித்த உடனே மயக்கமடைந்த பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

மயக்கம் தெளிந்துஎழுந்த பெண் தான் வன்கொடுமை செய்யப்பட்டதை தெரிந்து கொண்டு இளைஞரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அவரை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து நடந்ததை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின்பு அங்கிருந்து வெளியேறிய இளம்பெண் போலீஸில்புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இளைஞரை தேடி வருகிறது.