Published on 06/09/2019 | Edited on 06/09/2019
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள்.
அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (செப்டம்பர் 19 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அரசியல் பழிவாங்கல் காரணமாகதான் போதிய ஆதாரங்கள் இல்லாமலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கூறினார். மேலும் காஷ்மீர் விவகாரம், பொருளாதார வீழ்ச்சி போன்ற முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பும் முயற்சியே இது என தெரிவித்தார்.