Published on 06/10/2018 | Edited on 06/10/2018

தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலம் வலுப்பெற்று, அடுத்த 25 மணிநேரத்தில் இது புயலாக மாறக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வருகின்ற 8ஆம் தேதி வடக்கிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கே 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி ஒடிஷா நோக்கிச் செல்கிறது. இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், கேரளாவில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.