Skip to main content

16 யூடியூப் செய்தி சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

ுபர

 

தவறான செய்திகளை பரப்பியதாக 16 யூடியூப் சேனல்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் புழக்கத்தில் உள்ளன. அறிவுப்பூர்வமான செய்திகள் முதல் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் வரை அனைத்தையும் யூடியூப் சேனல் வழியாக மக்களுக்குச் செய்தியாக்கப்படுகிறது. இதனால் நல்ல விஷயங்கள் சில நடந்தாலும், தவறான செய்திகளால் சமூகத்தில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நீண்ட காலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

 

அதன்படி தவறான செய்தியைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 6 சேனல்கள் பாகிஸ்தானையும், 10 சேனல்கள் இந்தியாவையும் சேர்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.  இந்தியாவின் தேச பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது ஒழுங்கு தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக இந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்