Published on 18/03/2023 | Edited on 18/03/2023

பஞ்சாபில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாபை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக உள்ள அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காக இன்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை என 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய தேவையான தொலைப்பேசி அழைப்புகள், வங்கிக்கான குறுஞ்செய்தி வசதிகளில் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.