மத்திய பாஜக அரசு இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. ஆண்டு தோறும் முழுமையான பட்ஜெட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். அது அல்லாமல் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முழு பட்ஜெட் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரி இல்லாததால் சிகிச்சையில் உள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.