பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பேட்டரியால் இயங்கும் மின் வாகனங்களை வாங்கும் ஆர்வம், மக்களிடையே அதிகரிக்கும் நிலையில், மின் வாகனங்களை கையாள்வது, பராமரிப்பது உள்ளிட்டவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மின்சார வாகனங்களில் நீண்ட காலம் உழைக்கும் வகையிலான பேட்டரி இருக்கின்றனவா? மின்சார வோல்டேஜ்- க்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன்கள் அந்த பேட்டரில் இருக்கின்றனவா? என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மொபைல் ஃபோன்களை போன்றதுதான் மின்சார வாகனம், எனவே தினசரி நமது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, பேட்டரில் சார்ஜ் இருப்பை சரிபார்த்துக் கொள்வது நல்லது. அப்போது தான் சேரும் இடம் வரை சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்ப முடியும்.
முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்று நிறுவனங்கள் கூறினால், நீண்ட நேரத்திற்கு பேட்டரிகளை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மின்சார வாகனங்களின் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ள நேரம் வரை மட்டுமே சார்ஜ் செய்யலாம். நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால் தான் பேட்டரிகள் வெடித்து, வாகனங்கள் சேதமடைவதாக, நிபுணர்கள் கூறுகின்றன.
எனவே, பேட்டரிகளை சார்ஜ் செய்வதில் நுகர்வோர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் அவசியமோ, அதேபோல் வாகனத்தின் டயர் பராமரிப்பும் முக்கியம். டயர்களின் பிடிமானம் தேய்ந்திருந்தால், அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், அதிக நேரம் வெயிலில் வாகனத்தை நிறுத்தி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சாலைகளில் மின்சார வாகனத்தை வேகமாக இயங்குவதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு பிரேக்கின் திறனை அவ்வப்போது சோதித்துக் கொள்வது நல்லது.
எனவே, அவ்வப்போது பிரேக்கில் இருக்கும் பாகங்கள் சரியானபடி இருக்கிறதா, தளர்வாகிவிட்டதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.