Published on 26/09/2022 | Edited on 26/09/2022

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன்படி, ஸ்டோரிஸ் இனி ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. முன்பு, இது 18 வினாடிகள் மட்டுமே வைக்கும் படி இருந்தது.
பயனாளர்கள் தொடர்ந்து ஸ்டோரிஸ் அப்டேட் வேண்டுமென்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதற்கான சோதனை முன்னோட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது ஒரு நிமிட ஸ்டோரி என்ற அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பால் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.