Skip to main content

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 07/04/2025 | Edited on 07/04/2025

 

Enforcement Directorate raids Minister K.N. Nehru's son's house!

தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்று (07-04-05) காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

குறிப்பாக, சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி காலணி, எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. சிஐடி காலணியில் வசிக்கக்கூடிய அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள். சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதே போல், அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பியுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

எஸ்பிகே குழுமம், டிவிஎச் தொடர்பான இடங்களில் 2018இல் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்