காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி அழித்ததற்கான வீடியோ பதிவையும் இந்திய இராணுவம் அண்மையில் வெளியிட்டது. இந்த பதிலடியால் திணறிய பாகிஸ்தான் இராணுவம் ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை முகாமை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இந்திய இராணுவம் தாக்குதலை கைவிட்டது. ஆனால் தாக்குதல் கைவிடப்பட்ட அடுத்த சிலமணி நேரத்திலேயே கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளை நோக்கி அத்துமீறிய தாக்குதலை மீண்டும் நடத்தியது.
அந்த தாக்குதலில் சிறிய மோட்டர் ரக குண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய இராணுவ எல்லை பாதுக்காப்புபடையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் எல்லைமீறி தாக்குதல் நடத்தப்பட்டால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய எல்லை பாதுக்காப்புப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.