/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi_4.jpg)
காங்கிரஸ் பாஜக மீது ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் அளித்து வருகிறது.
மேலும் மத்திய அரசு, சிபிஐ இயக்குனர் மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனரையும் இரவுடன் இரவாக கட்டாய விடுமுறை கொடுத்து நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைக்கு காரணம் ரஃபேல் போர் விமான முறைகேடு வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது என்று தற்போது காங்கிரஸ் புகார் வைக்கின்றது.
இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் ராகுல் காந்தி இதே புகாரை தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தற்போது டெல்லியிலுள்ள லோக் கல்யான் மார்ஜ் என்னும் இடத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)