Published on 04/09/2018 | Edited on 04/09/2018

டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 71.27 ஆக இருந்தது. இது வரலாறு காணாத ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைஉயர்வு, அமெரிக்க சீன வர்த்தக போர் போன்ற காரணங்களால் தொடர்ந்து அண்மையில் ரூபாய் மதிப்பு குறைந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த வீழ்ச்சி வரலாறு காணாத வீழ்ச்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.