Skip to main content

அதிகரிக்கும் கரோனா! புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு! 

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

Increasing corona! New order for government employees in Pondicherry!

 

 

இந்தியா அளவில் கடந்த ஒரு வாரத்தில் வெளியான புள்ளி விவரங்களின் படி, நாட்டிலேயே கரோனா தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது. புதுச்சேரியில், 100 கரோனா பரிசோதனைகளுக்கு 51.75 சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,657 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதுச்சேரியில் 974, காரைக்காலில் 129, ஏனாமில் 17, மாஹேயில் 40 என மேலும் 1,160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் ஜனவரி 31ஆம் தேதி வரை 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அரசு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

அரசுத்துறையில், ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை 50% பேர் மட்டுமே பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், அரசு செயலர்கள், அரசுத்துறை செயலர்கள் 100% பணிக்கு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம். அரசுத் துறையின் கூட்டங்கள் அனைத்தும் காணொளியிலேயே நடத்தவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

 

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக மற்ற பெரும்பாலான மாநில அரசுகள் எடுத்துவரும் கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் இதுவரை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்