பூமிக்கு அடியிலிருந்து ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் வழங்க இன்று இரண்டாம் கட்ட ஏலத்தை நடத்துகிறது மத்திய அரசு. ஏற்கனவே முதல் கட்ட ஏலத்தில் டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான உரிமத்தை ஹரியானவை சேர்ந்த நிறுவனம் பெற்று, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட ஏலம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 29,333 ச.கிமீ பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க உரிமம் வழங்கப்பட உள்ளது. அதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 474 ச.கிமீ நிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் இன்று வழங்கப்பட உள்ளது. மேலும் முன்பிருந்த உரிம விதிப்படி ஒவ்வொரு ஹைட்ரோகார்பன் தயாரிப்பிற்கு தனித்தனியாக உரிமம் பெறவேண்டும் என்ற விதி இருந்தது. இது தற்பொழுது மாற்றப்பட்டு அனைத்து வகை ஹைட்ரோகார்பன் பொருட்களை எடுக்கவும் ஒரே உரிமம் போதுமானது என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த ஏலத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.