Published on 30/12/2019 | Edited on 31/12/2019
நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் குளிர் நிலவி வருகிறது. புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு நேரங்களில் சில மாநிலங்களில் குளிர் 10 டிகிரி வரை இருக்கின்றது.
குறிப்பாக புதுதில்லியில் முன் எப்போது இல்லாத அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்று உச்சகட்டமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்துள்ளது. இதுவரை வட மாநிலங்களில் குளிரின் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நேற்று தில்லியில் மட்டும் 6 பேர் பலியாகி உள்ளார்கள்.