Skip to main content

சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்...

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

டிக் டாக் செயலி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் டெல்லியை சேர்ந்த மோஹித் மோர் என்பவர்.

 

Gym instructor known for his TikTok videos shot dead

 

 

இவர் டெல்லியின் நஜப்கர் பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று தனது உடற்பயிற்சி கூடத்திற்கு கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் மோஹித்தை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

மோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது சமூகவலைத்தள பக்கங்களின் தகவல்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்