Skip to main content

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம் - தமிழக நிதியமைச்சர் பங்கேற்பு 

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

GST Council Meeting begins

 

47ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. இரு தினங்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டுள்ளார்.

 

கேசினோ, குதிரைப்பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவிகிதம்வரை வரி விதிப்பது, மாநிலங்களுக்கு 2026ஆம் ஆண்டுவரை ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

The Tamil Nadu government is against the central government's decision

 

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (07.10.2023) 52வது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார்.

 

இந்தக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சிறு தானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது. அதன்படி சிறுதானிய மாவு உணவு தயாரிப்புக்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பதால் சத்தான உணவுப் பொருட்கள் மக்களைச் சென்றடையும். சத்தான உணவுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் கவனம் திரும்ப இந்த வரி குறைப்பு உதவும்” எனத் தெரிவித்தார்.

 

அதே சமயம் இந்தக் கூட்டத்தின் போது, மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “உயிர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது. உயிர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மேலும் சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரையை தமிழகம் ஏற்றுக்கொள்கிறது. சிறுதானிய பொருள் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் முடிவை ஏற்கிறோம்” எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

 “ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

28% GST for online games  Union Minister Nirmala Sitharaman

 

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று மாலை (02.08.2023) 51 வது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தின்போது இணையவழி விடுதிகள், விளையாட்டுகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்கு மற்றும் சேவை கவுன்சிலில் ஏற்றுக்கொள்ள உறுதியளிக்கப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். இந்த வரி விதிப்பு குறித்து 6 மாதங்களுக்குப் பின்னர் மறு ஆய்வு செய்யப்படும். தமிழ்நாடு, சிக்கிம், கோவா டெல்லி அரசுகளின் கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசின் தடைச் சட்டத்தை பாதிக்காத வகையில் 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.