உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலகம் 50 ஆண்டுகள் பழமையானது. அந்த அலுவலகத்தின் மேற்கூரை கான்கிரீட் கலவையால் போடப்பட்டு இருந்தும், பல வருடங்களான அந்த கட்டிடம் பயன்பாட்டில் உள்ளதால் இந்த கான்கிரீட் மேற்கூரை வலுவிழந்து எப்போது வேண்டுனாலும் இடிந்து விழலாம் என்கிற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மேற்கூரை கான்கிரீட்டைத் தாங்குவதற்கான தூண்கள் அறைக்கு நடுவில் மட்டுமே உள்ளதாகவும், இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அசம்பாவிதமாக ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஹெல்மெட் அணிந்துகொண்டு பணிபுரிவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபற்றி மேலதிகாரிகளிடம் எத்தனையோ முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும், மழைக்காலத்தில் கட்டிடத்துக்குள் ஒழுகுவதால், முக்கிய ஆவணங்களை பாதுகாக்க அலமாரி கூட இல்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.