உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென் இந்தியாவை பொறுத்தவரையில், தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு 3000க்கும் மேலாக வந்து கொண்டிருக்கின்றது. மாநில அரசுகள் தனிமனித இடைவெளியையும், மாஸ்க் அணிதலையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
நோயை தடுக்க மாஸ்க் அணிந்துகொண்ட காலம் போய் சிலர் இதிலும் வித்தியாசம் காட்டுகிறேன் என்று மற்றவர்களின் எரிச்சலை சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் சங்கர் குரேட் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு ரூ 2.90 லட்சம் மதிப்பில் தங்கத்தால் ஆன மாஸ்கை அணிந்து நகர்வலம் வந்தார். அப்போதே அவரின் அந்த நடவடிக்கைக்கு இணையத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் தற்போது வைரத்தால் ஆன மாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாஸ்க் ஆண், பெண் என்று மேட்சிங் மாஸ்களாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 1 லட்சத்தில் துவங்கி 4 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.