Skip to main content

பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தால் நூதன தண்டனை! - விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

naresh  tikait

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்திய அவர்கள், அதன்பிறகு சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை, போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற முடிவில் விவசாயிகள் உறுதியாகவுள்ளனர்.

 

இந்தநிலையில், பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பின் தலைவர், பாஜக தலைவர்களுக்கு தங்கள் அமைப்பில் உள்ள விவசாயிகள் யாரும் விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதை மீறினால் வினோதமான ஒரு தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகைத், "இதை உத்தரவாகவோ, அறிவுரையாகவோ எடுத்துக் கொள்ளுங்கள். யாரும் பாஜக தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பக்கூடாது. அப்படி அனுப்புபவர், அடுத்த நாள் 100 பேருக்கு உணவை அனுப்ப வேண்டும்" என விவசாயிகளிடையே உரையாற்றும்போது தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து, அவர்களிடம் (பாஜக தலைவர்கள்) யாராவது தவறாக நடந்துகொண்டால், அவர்கள் பாரதிய கிசான் யூனியனையும் எங்களையும் குற்றம் சாட்டுவார்கள். எனவே அவர்கள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நான் இதைக் கூறினேன். வேண்டுமானால் நீங்கள் இதைப் புறக்கணிப்பாகக் கருதலாம்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்