அலோபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என பாபா ராம்தேவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸிற்கு எதிரான போரில் ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் உதவி இன்றி மீண்டு வர முடியாது என சில தினங்களுக்கு முன் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்தார். அலோபதி மருத்துவ முறையை விமர்சித்து அவர் சொன்ன கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவருக்கு எதிராக இந்திய மருத்துவ கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளும் இவரின் மேல் அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் நீதிமன்றம் அலோபதிக்கு எதிராக எந்த ஒரு விமர்சனத்தையும் கூறக்கூடாது எனவும் மக்களை தவறான வழியில் வழி நடத்தாதீர்கள் எனவும் பாபா ராம்தேவ்க்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி" ஆயுர்வேதத்தின் நற்பெயரும் பழங்கால பெருமையும் காப்பாற்ற பட வேண்டும் என்பது எனது நோக்கம் அதே வேளையில் அல்லோபதி மருத்துவத்திற்கும் எதிராக மக்களை யாரும் வழிநடத்தக்கூடாது" என தெரிவித்துள்ளார். மேலும் தனது நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய தனது யோகா மருத்துவ முறையை விற்பனை செய்ய மற்ற முறைகளை ராம்தேவ் விமர்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.