Published on 13/11/2018 | Edited on 13/11/2018

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து கோவிலுக்குள் வந்த குறிப்பிட்ட வயது பெண்களை உள்ளே அனுமதிக்காமல் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பின்னர், வன்முறையானது. வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தது கேரள போலிஸ். போலீஸ் அறிக்கையை ஏற்று தாமாக முன்வந்து கேரள உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம், சபரிமலையில் நடந்த வன்முறைக்கு தேவசம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.