Published on 27/02/2019 | Edited on 27/02/2019

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேசத்திலும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் எனவும், பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ, எப்படி பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கும் இந்தியா தயார் எனவும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.