Skip to main content

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட டெல்லி அரசு தடை!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

vinayagar chaturthi

 

இந்தியா முழுவதிலும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. கரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் விநாயர் சதுர்த்தியைப் பொது இடங்களில் கொண்டாடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லியிலும் கரோனா பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

டெல்லியில் நேற்று (07.09.2021) 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது; கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்