Skip to main content

பிராண்ட் இல்லாத பொட்டலமிட்ட உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

5% GST on unbranded packaged food items!

 

பிராண்ட் இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

 

சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று (28/06/2022) தொடங்கியது. முதல் நாளான நேற்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்த சிலவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முத்திரை இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை, காய்கறிகள் கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

அதேநேரம், பொட்டலமிடப்படாத முத்திரையற்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் ரூபாய் 1,000- க்கும் குறைவான அறைகளின் வாடகையில் 12% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

காசோலைகளை வங்கி விதிக்கும் கட்டணத்தில் 18%- ம், அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12%- ம் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரை பந்தயம் உள்ளிட்டவைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்