![Delhi Assembly Elections; BJP continues to lead](http://image.nakkheeran.in/cdn/farfuture/5OijQJhRagGK0SF7UGlhQYMMLDce_EsCH_aL9orEnZE/1738987530/sites/default/files/inline-images/bjp-hindi-flag-art.jpg)
70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (08.02.2025) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முன்னதாக கடந்த 2015 மற்றும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்து களம் கண்டு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவி வருகிறது.
தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியின் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா முன்னிலை வகித்து வருகிறார். காலை 9.30 மணி நிலவரப்படி பாஜக 50 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.