![Nurse applies Fevikwik to boy with cheek injury instead of stitching](http://image.nakkheeran.in/cdn/farfuture/OOjGkUEX2Qe6CfODtNJvdAKv3_V6dS9TH7OGWI2spsk/1738921322/sites/default/files/inline-images/51_111.jpg)
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அடூர் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 7 வயது சிறுவனுக்கு விளையாடும் போது கன்னத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தையல் போடுவதற்காக ஆரம்ப சுகாதார மையத்திற்கு உறவினருடன் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த ஜோதி சிறுவனின் கன்னத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்(Fevikwik) தடவி பேண்டேஜ் போட்டு அனுப்பியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இரவு அந்த செவிலியரின் வீட்டிற்கே நேரில் சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது தையல் போட்ட கன்னத்தில் தழும்பு தெரியும் ஆனால் ஃபெவிக்விக் போட்டால் தழும்பு தெரியாது. பல வருடங்களாக என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இதைத்தான் செய்து வருவதாகவும் செவிலியர் ஜோதி தெரிவித்துள்ளார்.
இதனை வீடியோவாக பதிவு செய்த சிறுவனின் பெற்றோர் மருத்துவ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, செவிலியர் ஜோதியை பணியிட மாற்றம் செய்து மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளனர்.