Skip to main content

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு காங்கிரஸை விட இரண்டு மடங்கு வாரி இறைத்த மோடி அரசு! ஆர்டிஐ கொடுத்த ஷாக்!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
மோ

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.


2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி தொடங்கியது முதல் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அதுகுறித்து தொடர்ச்சியாக பல விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி தலைமையிலான அரசு விளம்பரத்திற்கு மட்டும் எத்தனை செலவு செய்து இருக்கிறது என்பது குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதில் 2014ஆம் ஆண்டு மே தொடங்கி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 4996.61 கோடி செலவு செய்யப்படு இருப்பது தெரியவந்தது இருக்கிறது. இந்த தொகையானது 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி விளம்பரத்துக்கு செலவு செய்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மொத்தம் 5040 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ஆண்டு சராசரியாக 1202 கோடி ரூபாயை மோடி அரசு விளம்பரத்திற்காக செலவு செய்து இருக்கிறது.  காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 504 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

 

மோடி அரசு அட்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 2,136.39 கோடியும் ,காட்சி ஊடகங்களில் செலவு செய்ய 2,211.11கோடியும் செலவு செய்து இருக்கிறது. வெளிபுற விளம்பரத்திற்கு 649.11 கோடி செலவு செய்திருக்கிறது.

 

இத்தனை கோடி செலவு செய்திருக்கும் மோடி அரசு பல்வேறு சமூக நலதிட்டங்களுக்கு ஓதுக்கப்பட்ட வேண்டிய தொகையை நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்