Skip to main content

தைப்பூசத்தை முன்னிட்டு பாதாள செம்பு முருகன் கோவிலில் இலவச மருத்துவ முகாம்! 

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

Free medical camp at Temple on the occasion of Thaipusam

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும்  இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில்  வளாகத்தில் பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல்  வடமலையான் மருத்துவமனையும் இணைந்து தைப்பூசத்தை முன்னிட்டு  மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  மருத்துவ முகாமினை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர்  சச்சிதானந்தம் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார். 

Free medical camp at Temple on the occasion of Thaipusam

இந்த மருத்துவ முகாமில்  ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள்,  ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்  எல்லைப்பட்டி, கட்டசின்னாம்பட்டி, ஏரணம்பட்டி, ராஜா புதூர் , கருப்பிமடம், காமாட்சிபுரம், இராமலிங்கம்பட்டி, சுற்றுவட்டார கிராம மக்கள்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து  கொண்டு நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று சென்றனர். இந்த இலவச  மருத்துவ முகாமில் பிரஷர் பரிசோதனை,  கண் பரிசோதனை, சர்க்கரை  பரிசோதனை, இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் ஆகியவை  பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமினை  பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Free medical camp at Temple on the occasion of Thaipusam

இந்த நிகழ்ச்சியில் வடமலையான் மருத்துவமனை முதன்மை மருத்துவர்  கார்த்திகேயன்,  அரசு முகாம் அலுவலர் வடமலையான், ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி  கார்த்திகேயன், மாசு கட்டுப்பாட்டு வாரிய  DEE டாக்டர் குணசேகரன், AEE  ராஜேஸ்வரி,  பாதாள செம்பு முருகன் அறங்காவலர் சேது பாலக்கிருஷ்ணன்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்