Published on 01/11/2018 | Edited on 01/11/2018

மானியத்துடன் விநியோகிக்கப்படும் சிலிண்டர் மற்றும் மானியமில்லா சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மானியத்துடன் விநியோகிக்கப்படும் சிலிண்டர் விலை 2.94 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் நள்ளிரவிலிருந்து அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 502.40 காசுகளாக இருந்த மானிய சிலிண்டரின் விலை தற்போது 505.34 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை ஆறாவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மானியமில்லா சிலிண்டரின் விலையும் 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.