உணவு தவிர்த்து இந்தியர்களின் அத்தியாவசிய பானமாக இருப்பது தேநீர். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் குட்டிக்குட்டி டீக்கடைகளே அதற்கு சாட்சி. ஆனால், அதன் மூலமாக பெரிய வருமானம் ஈட்டமுடியுமா என்றால் கேள்விக்குறிதான். அந்த நிலையை மாற்றி, டீ வியாபாரத்தையே பிரதானத் தொழிலாக எடுத்துக்கொண்டு அதில் சாதித்தும் காட்டியிருக்கிறது புனேவைச் சேர்ந்த யவ்லே டீ ஹவுஸ் நிறுவனம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tea.jpg)
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்தான் இருக்கிறது யவ்லே டீ ஹவுஸ் எனும் அந்தக் கடை. தொடக்கத்தில் சுமாராக வியாபாரம் போனாலும், காலப்போக்கில் அந்த நகரின் முக்கியமான கடை என்ற பெயரையே பெற்றிருக்கிறது அந்த டீக்கடை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ani.jpg)
நல்ல தேநீருக்குக் கிடைத்த வெகுமதி இது எனக்கூறும், யவ்லே டீ ஹவுஸின் இணை நிறுவனர் நவ்நாத், ‘சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல், இந்த டீக்கடையை நிறுவ நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டோம். டீப்பிரியர்களைக் குறிவைத்து நாம் வியாபாரம் செய்ய வேண்டுமென்றால், நல்ல டீயைக் கொடுக்கவேண்டும். அது எங்களுக்கு சாத்தியமானது. தற்போது புனேயில் மூன்று கிளைகள் இருக்கின்றன. நாடு முழுவதும் எங்கள் பிராண்டை எடுத்துச் செல்வதுதான் லட்சியம்’ என புன்னைகைத்த முகத்தோடு சொல்கிறார்.
பக்கோடா தொழில் மட்டுமின்றி டீக்கடையும் இந்தியாவில் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும். கடையொன்றுக்கு 12 ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் என்னால், மாதம் 12 லட்சம் சம்பாதிக்க முடிகிறது என மேலும் தன் உற்சாகத்தைப் பகிர்கிறார் நவ்நாத்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)