/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_546.jpg)
அமெரிக்கப் பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் கடந்த 22 ஆம் தேதி கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஆசிரமத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற இருவர் அமெரிக்கப் பெண்ணுடன் நட்பாக பேசியுள்ளனர். மேலும் அந்த பெண்ணுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்பு அந்த பெண்ணிற்குப் போதை அதிகமாகி மயக்கமடைந்த நிலையில், இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த பிறகு, தான் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த அப்பெண் ஆசிரம அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருணாகப்பள்ளி காவல்நிலைய போலீசாரிடம் அமெரிக்கப் பெண் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அமெரிக்கப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கருணாகப்பள்ளி செரியழிக்கல் பகுதியைச் சேர்ந்த நிகில்(28) மற்றும் ஜெயன்(24) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)