Skip to main content

பசும்பாலில் தங்கம் உள்ளதால் தான் அது வெளிர் நிறத்தில் இருக்கிறது - பாஜக பிரமுகர் பேச்சு!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

பசும்பாலில் தங்கம் இருக்கிறது என மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, " சிலர் அதிகம் படித்தவர்கள் என்று பெருமை பேசிக் கொண்டு ரோட்டோர கடைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். ஏன் பசுமாட்டிறைச்சி சாப்பிடுகிறீர்கள்? நாய்க்கறி கூட சாப்பிடலாமே, அதுவும் உடலுக்கு நல்லதுதானே? நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதை உங்களின் வீட்டுக்குளிள் செய்யுங்கள். பசுமாடு எங்களின் தெய்வம். அதனை அவமதிப்பதை, கொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுப் பசும்பாலில் தங்கம் இருக்கிறது. அதனாலேயே அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டுப் பசுமாட்டின் காம்பில் சூரியஒளி படும்போது பாலில் தங்கம் உருவாகும்.
 

df


இந்தியா கிருஷ்ணரின் பூமி. இங்கு நாங்கள் பசுவை மதிக்கிறோம். இனியும் அப்படித்தான் இருப்போம். பசுவதை பெருங்குற்றம். குழந்தைகள் தாய்ப்பாலுக்குப் பின்னர் பசும் பாலையே குடிக்கின்றனர். தாயாக விளங்கும் பசுவை வதை செய்தால் எப்படிப் பொறுப்பது. மேலும், சிலர் வெளிநாட்டுப் பசுக்களை வளர்க்கின்றனர். வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் சிக்கல் வருவதுபோல் வெளிநாட்டுப் பசுக்களாலும் சிக்கல் வரும் " எனக் கூறினார். திலீப் கோஷ் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பேசி விமர்சனத்துக்கு உள்ளாவார். சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்க காவல்துறையை பற்றி தவறான கருத்தை பேசியதற்காக கண்டனத்திற்கு உள்ளானார்.

 

 

 

சார்ந்த செய்திகள்