Skip to main content

கணவனை கொன்ற இடத்தில் என்னையும் சுடுங்கள் - குற்றவாளி மனைவி பகீர்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹைதராபாத் போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். இதற்கு பெண்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தன்னுடைய கணவனின் மரணம் தொடர்பாக சென்ன கேசவலுவின் மனைவி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் '' என்னுடைய கணவன் இறந்த இடத்திற்கு என்னையும் கூட்டிச்சென்று சுட்டு கொல்லுங்கள் என போலீசாரிடம் கேட்டு கொள்கிறேன்.ஒரு வருடத்திற்கு முன்னால் தான் எங்களுக்கு திருமணம் ஆனது. நான் இப்போது மாசமாக இருக்கிறேன்'' என தெரிவித்து இருக்கிறார். கடந்த வாரம் சின்ன கேசவலுவின் தாயார் அந்த பெண் போலவே அவனையும் போலீசார் எரித்து கொல்ல வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மனைவிக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவர்!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
husband built a temple for his wife and performed Kumbabhishekam

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ளது தேவாமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூர் பகுதியில் சொந்தமாக பின்னலாடை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவருக்கும் கற்பகவல்லி என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் பிள்ளை உள்ளது.

கற்பகவள்ளிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அதில் அவருக்கு கிட்னி பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை நல்ல மருத்துவமனையில் வைத்து அவரது கணவர் கோபாலகிருஷ்ணன் அவ்வப்போது சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கற்பகவள்ளியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இது குறித்து மனைவியிடம் பாசமுடன் கோபாலகிருஷ்ணன் பேசும் போது, “உன்னை எப்படியும் காப்பாற்றுவேன்; அப்படி ஒருவேளை உன்னை காப்பாற்ற முடியாவிட்டால் உன் உடல் அடக்கம் செய்த இடத்தில் உனக்கு ஒரு கோவில் கட்டி உன்னை தெய்வமாக வணங்குவேன்..” என்று மனைவிக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி  கற்பகவல்லி சமீபத்தில் உயிரிழந்தார்.

husband built a temple for his wife and performed Kumbabhishekam

இதையடுத்து அவரது உடலை தனது சொந்த இடத்தில் கோபாலகிருஷ்ணன் உறவினர்கள் உதவியுடன் அடக்கம் செய்தார். அந்த இடத்தில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து நவீன முறையில் ஒருகோயிலை எழுப்பி, உறவினர்கள், ஊர் மக்கள் ஒத்துழைப்போடு வேத மந்திரங்கள் ஓதி நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். கோவிலுக்குள் மனைவியின் புகைப்படத்தை வைத்து தீபாரதனை காட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. தற்போது தனது மனைவி உடல் அடக்கம் செய்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள கோவிலில் தினசரி அணையாவிளக்கு எரிவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். அத்தோடு விசேஷ நாட்களில் ஆலயத்தில் பூஜைகள் நடப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

தன் பிரியமான மனைவி மறைந்த பிறகு அவருக்கு கோவில் கட்டி அதை நினைவு சின்னமாக வழிபட்டு வரும் கோபாலகிருஷ்ணனின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

கணவருக்கு தவறான சிகிச்சை; மனைவி பரபரப்பு புகார்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
wife complained to the collector that her husband had been ill-treated

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்குமார். இவரது மனைவி சாவித்திரி. இந்தத் தம்பதியினருக்கு  2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனுக்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயிற்று வலி காரணமாக சென்ற தனது கணவருக்கு தவறான மருத்துவ சிகிச்சை அளித்ததாகக் கூறி சாவித்திரி தனது மகனுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சாவித்திரி, “எனது கணவர் கந்தன்குமார் கூலி வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனநலம் குன்றிய நவீன் குமாருக்கு தேவையான சிகிச்சை அளித்து தனது குடும்பத்தைக் காத்து வந்த நிலையில் கந்தன்குமாருக்கு ஏற்பட்ட தீராத வயிற்றுவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம், மேலும் கணவர் கந்தன்குமாருக்கு மார்ச் மாதம் 23ஆம் தேதி வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறி முதுகு தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து முதுகில் செலுத்தப்பட்ட மயக்க ஊசியில் இருந்த நீடில் சுமார் 8 சென்டிமீட்டர் அளவில் முதுகிலேயே இருந்து விட்டதாகவும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கூறியதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கணவரை மேல் சிகிச்சைக்காக அனுமதித்து முதுகு தண்டுவடத்தில் இருந்த 8 சென்டிமீட்டர் நீடிலை அகற்றினர். இதனால் எனது கணவர் கந்தன்குமாரின் உடலில் இடுப்புக்கு கீழே உள்ள எந்த உடல் உறுப்பும் வேலை செய்யாமல் செயல் இழந்து விட்டது

இதனால் எனது கணவரின் வயிற்று வலிக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் முதுகில் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டு எனது கணவரின் உடல் உறுப்புக்கள் செயல் இழக்க காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினந்தோறும் கணவரின் கூலியை நம்பி குடும்பத்தை நடத்தி வந்த நாங்கள் தற்பொழுது கையேந்தும் நிலைமைக்கு சென்று விட்டதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனக்  கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

பாதிக்கப்பட்ட கந்தன்குமாரின் இளைய மகன் புவனேஷ் கூறுகையில், என்னுடைய அப்பாவிற்கு வயிற்று வலி என மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் இப்ப தப்பான சிகிச்சை அளித்து எங்க அப்பா நடக்க முடியாமல் இருக்கார் அவரை எப்படியாவது நடக்க வைக்கணும். எங்க அப்பா பழைய மாதிரி எனக்கு வேணும்” என்று கண்ணீருடன் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட கந்தன் குமாரின் மனைவி சாவித்திரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.