Skip to main content

ஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் கைது! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

Three terrorists arrested in Jammu and Kashmir Terrorist weapons confiscated!

 

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக நேற்று அப்பகுதி போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். பாபர் பாய் என்ற பெயரை கொண்ட அந்த பயங்கரகாதி கடந்த 2018ம் ஆண்டு முதல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த என்கவுண்ட்டருக்கு முன்பு, குடிமக்களை பாதுகாப்புடன் இராணுவ வீரர்கள் வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர், 3 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர்.  

 

இந்நிலையில், இன்று ஜம்மு - காஷ்மீர், குப்வாரா அருகே தர்போராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காஷ்மீர்; எதிர்க்கட்சிகள் அச்சம்; விளக்கம் தந்த துணைநிலை ஆளுநர் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Kashmir Governor explained about land issue

 

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில், திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வரும் அரசு நிர்வாகம் சார்ந்த மூன்று நாள் தேசிய பயிலரங்கத்தின் தொடக்க உரையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதில் எதிர்க்கட்சியினர் சிலர் மாறுபட்ட கருத்துக்களைக் கூறிவருவதை சுட்டிக்காட்டி பேசினார்.

 

நகர்ப்புறங்களில் வாழும் நிலம் இல்லாத மக்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் ஜூன் 2015 இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2,711 நிலமற்ற குடும்பங்களுக்கு தலா 5 மார்லாக்கள் (1,360 சதுர அடி) நிலத்தை வழங்குவதாக ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்தது.

 

இந்த அறிவிப்புக்கு அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள், ஜம்மூ காஷ்மீரை சேராத மக்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதாக கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, “இந்த அறிவிப்பு யூனியன் பிரதேசத்தில் வெளிநபர்கள் எதிர்க்கட்சியினரின் குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுவார்களோ என்ற அச்சத்தையும், வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கும் பெயரில், ஜம்மு காஷ்மீரில் சேரிகள் மற்றும் வறுமையை உருவாக்க நினைப்பதாக தோன்றுகிறது. இது மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பையும் மாற்றும்” என தெரிவித்தார். 

 

அதேபோல், முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா, “ஆகஸ்ட் 2019ல் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் குடி வந்தவர்களும் வீடற்றவர்களாகக் கணக்கிடப்படும் சூழல் உண்டாகும். 2019 க்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு குடி வந்தவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயனடைய வாய்ப்பு உள்ளது” என தனது அச்சத்தைத் தெரிவித்தார். 

 

இதற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, திங்கள் கிழமை நடைபெற்ற தேசிய பயிலரங்கம் நிகழ்ச்சியில் பதில் அளித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர், “1990 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் 50,000 பேரை இழந்ததற்கு இப்போது இத்திட்டத்தை விமர்சிப்பவர்கள் தான் காரணம். காஷ்மீரில் நிலவும் அமைதியை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் இவர்கள் வீதி வன்முறைகள், கல்வி நிறுவனங்களை இயங்க விடாமல் செய்வது போன்றவற்றிற்காக மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். ஜம்முவின் குடியுரிமையுள்ள மக்களைத் தவிர ஒருவருக்கு கூட  இத்திட்டத்தின் கீழ் நிலம், வீடு வழங்கப்படவில்லை. 

 

வெளிமாநிலத்தவருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என இங்கிருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கூட கேட்டு அறியலாம். இது தொடர்பாக பகிரப்படும் அனைத்து கருத்துகளும் வதந்திகளும், ஜம்முவில் அமைதி நிலவுவதை குலைப்பதற்காக சில நபர்களால் செய்யப்பட்டவை. காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து தான் சிறந்த மாற்றங்கள் நடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில், வழக்கமாக நிகழும் வீதி வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆண்டு முழுவதும் இயங்குகிறது. இரவு 10 மணிக்குப் பிறகும் உணவகங்கள் இயங்கி வருகிறது. மக்களும் இரவு நேரங்களில் முன்புபோல் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்” என்றார்.

 

 

 

Next Story

உளவுத்துறை எச்சரிக்கை... எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்!!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

drone

 

சமீப காலமாகவே ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமற்ற ட்ரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (23.07.2021) ஜம்மு காஷ்மீர் கனசாக்கில் வெடிபொருட்களுடன் சுற்றிய ட்ரோனைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எல்லையில் சுற்றிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்த வெடி பொருட்களைக் கைப்பற்றி இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

அடுத்த மாதம் சுதந்திர தினம் என்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.