Skip to main content

மத்திய, மாநில அரசுகளுக்கு சவால்வடும் கரோனா! இந்தியாவில் உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!!

Published on 03/05/2020 | Edited on 03/05/2020

 

corona virus impact in india

 

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.


இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 37,776 லிருந்து 39,980 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,223 லிருந்து 1,301 ஆக வும் உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 10,018 லிருந்து 10,633 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்