உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 1,000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையை ஒடிஷா அரசு அமைக்கிறது. கரோனா சிறப்பு மருத்துவமனையை இன்னும் இரண்டு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒடிஷாவில் கரோனாவால் இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடாக ஒடிஷா அரசு ஏற்பாடு செய்துள்ளது
இந்தியாவிலேயே முதன்முறையாக கரோனாவுக்காக சிறப்பு மருத்துவமனையை ஒடிஷா அரசு அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.