Skip to main content

சந்திரயான்- 2 விண்கலம் திடீரென நிறுத்திய இஸ்ரோ!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இந்த விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்ளும். இதற்கான 20 மணி நேர கவுன்ட- டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுன்ட்- டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

 

 

 

chandrayaan 2 launch called off in isro space centre announced launched date soon

 

 

 

 

ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில் கவுன்ட்- டவுன் நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுன்ட்- டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை காண இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் உட்பட 7000 பேர் சதீஷ் தவான் ஏவுதளத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். சந்திரயான் 2 மீண்டும் எப்போது விண்ணில் ஏவப்படும் என்பது தொடர்பான தகவல் இஸ்ரோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்