Skip to main content

ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி; தமிழக அரசு அறிவிப்பு

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
tngovt

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில். 1972-1973 ஆண்டு முதல் முதல் 2002-2003 ஆண்டு வரையிலான காலகட்டங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 ஆண்டு முதல் 2009-2010 ஆண்டு வரையிலான காலகட்டங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் மொத்தம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் 48 கோடியே 95 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்