Published on 16/07/2022 | Edited on 16/07/2022
வெங்காயம் விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதன் கையிருப்பை 2.5 லட்சம் டன்னாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதிகம் உற்பத்தியாகும் காலங்களில் கிலோ 10 ரூபாய்க்கு கூட கிடைக்கும் வெங்காயம், பருவமழையின் போது, 100 ரூபாயைத் தொடுவதும் வழக்கம். இந்த நிலையை மாற்ற, இதுவரை இல்லாத அளவாக 2.56 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்து வருகிறது மத்திய அரசு.
நாடு முழுவதும் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பின் மூலம் வெங்காயத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்முதல் செய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக 2.5 லட்சம் டன் வெங்காயம் இருப்பு வைப்பதன் மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.