புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்தின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஏ.சி. வசதி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 5 இலிருந்து ரூ. 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நகரப் பேருந்துகளுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ. 13 இலிருந்து ரூ. 17 ஆக உயர்ந்துள்ளது.
ஏ.சி. வசதியுடன் கூடிய நகரப் பேருந்துகளுக்குக் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 இலிருந்து ரூ.13 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய நகரப் பேருந்துகளுக்கு அதிகபட்சமாக ரூ. 26 இலிருந்து ரூ.34 ஆக அதிகரித்துள்ளது. டீலக்ஸ் ஏ.சி. பேருந்துகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 12 இலிருந்து ரூ.16 ஆக பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி டீலக்ஸ் ஏ.சி. பேருந்துகளுக்கு அதிகபட்சமாக ரூ. 36 இலிருந்து ரூ. 47 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.க்கு ரூ. 0.75 பைசா என்பது தற்போது 0.98 பைசாவாக உயர்ந்துள்ளது. 25 கி.மீ. வரை ரூ.20 இலிருந்து ரூ. 25 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி எல்லைக்குள் ஏ.சி. விரைவுப் பேருந்துக் கட்டணம் ஒரு கி.மீ.க்கு ரூ. 1.30 இலிருந்து ரூ. 1.69 ஆக உயர்ந்துள்ளது. அதோடு புதுச்சேரி நகரத்திற்குள் வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் ஒரு கி.மீ.க்கு ரூ. 1.70 இலிருந்து ரூ. 2.21 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து கடலூருக்கான கட்டணம் ரூ. 20 இலிருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.25 இலிருந்து ரூ. 30 ஆகவும் அதிகரித்துள்ளது.