Published on 13/09/2019 | Edited on 13/09/2019
இன்று அதிகாலை விநாயகர் சிலையை கரைக்க நதிக்கு சென்ற 11 பேர் படகு விபத்தில் பலியான சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கட்லாபுரா பகுதியில் உள்ள இளைஞர்கள், அப்பகுதியில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க படகில் எடுத்து சென்றுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆற்றில் சென்ற படகு திடீர் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. இதில் படகில் சென்றவர்களில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும் சிலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் பிசி சர்மா தெரிவித்துள்ளார்.