மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகாரின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ இஸ்லாமிய மக்களாகிய நீங்கள் உங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம். இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களில் சுமார் 64 சதவீதம் நீங்கள்தான் உள்ளீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, நரேந்திர மோடியை இந்த முறை தோற்கடிக்க வேண்டும்" என கூறினார்.
இந்நிலையில் சித்துவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வாக்களர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சித்துவுக்கு எதிராக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.