மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் காஷ்மீர் பிரச்சனைக்கு தேர்வு கிடைக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்த நிலையில், இம்ரான்கான் பேசியதை மேற்கோள் காட்டி மோடியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த அவர், “ பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மோடியுடன் கூட்டு வைத்துள்ளது. மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது. மோடி, முதலில் நவாஸ் ஷெரீப் மீது அன்பு கொண்டிருந்தீர்கள், தற்போது இம்ரான் கான் உங்களின் நேசத்துக்குரிய நண்பராகிவிட்டார். உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.