
மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் ஹெமதாபாத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டின் அருகில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வரும் சூழலில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த தேபேந்திர நாத்தை வெளியே அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே, தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், "மேற்கு வங்கத்தின் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேபேந்திர நாத் ரே படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது மம்தா அரசின் சட்டம் ஒழுங்கின் தோல்வியைக் காட்டுகிறது" எனக் கூறி உள்ளார்.