பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் பொது செயலாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. காங்கிரஸின் இந்த செயல் அக்கட்சி தொண்டர்கள் தரப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரியங்கா காந்தியை குறித்து முறையற்ற கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பீகார் அமைச்சர் வினோத் நாராயண் ஜா. பிரியங்கா காந்திக்கு பதவியளித்தது குறித்து இவர் பேசுகையில், 'பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். ஆனால் அழகான முகத்தை மட்டும் வைத்து வாக்குகளை வென்றுவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் ஊழலில் சிக்கிய ராபர்ட் வதேராவின் மனைவி பிரியங்கா காந்தி. அவரது கணவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரியங்கா அழகாக இருந்தாலும், அரசியல்ரீதியாக ஏதும் சாதிக்கவில்லை, அரசியல் அறிவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.